வைரஸ் பரவல் தடுப்பு குறித்து அமெரிக்க அரசியலாளர்களின் தவறு நீக்க முடியாது

கலைமணி 2020-03-17 18:54:48
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அமெரிக்க இரு நாடுகளின் தூதாண்மை அலுவலுக்குப் பொறுப்பு ஏற்கும் உயர் நிலை அதிகாரிகள் தொலைபேசி மூலம் 16ஆம் நாள் தொடர்பு கொண்டனர்.

அமெரிக்காவின் அரசியாளர்களில் சிலர் சீனாவின் மீதும், சீனா மேற்கொண்ட வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் இடைவிடாமல் அவதூறு கூறி வருகிறது. சீன பொது மக்களின் கோபத்தை இது ஏற்படுத்தியுள்ளது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், சீன மத்திய வெளி விவகாரப் பணி ஆணையத்தின் அலுவலகத்தின் தலைவருமான யாங் ச்சியே சீ அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோவுக்குச் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவின் தலைவர், புதிய ரக கரோனா வைரஸுக்கு சீன வைரஸ் என்று பெயர் சூட்டினார். இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சின் செய்திதொடர்பாளர், 17ஆம் நாள், பேசுகையில், இது சீனாவின் பெயரை கொடுக்கம் மோக்கமாகும். சீனா இதை கடுமையாக எதிர்ப்பதோடு, உறுதியான கண்டனம் தெரிவிக்கிறது என்றார்.

வைரஸ் பரவல் தொடங்கிய பிறகு, அமெரிக்காவின் அவதூறு கூற்றுக்கு சீனா தெரிவித்த மிக கடுமையான எதிர்ப்பு இதுவாகும். இது சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீனாவின் கோபம், எளிதாக புரிந்துகொள்ளத்தக்கது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சீன மக்கள் நிறைய பங்கு ஆற்றி, உலகளவில் வைரஸ் பரவலைத் தடுத்துள்ளது. சர்வதேச சமூகம் இதை பெருமளவில் பாராட்டி வருகின்றது. ஆனால், அமெரிக்கா, வைரஸ் பரவல் தடுப்பில் கவனம் செலுத்தவில்லை.

அமெரிக்காவின் வைரஸ் பரவல் தடுப்பு பணியில் ஏற்பட்ட சுணக்கத்தைச் சுட்டிக்காட்டியப் பிறகு, இவ்வைரஸ் உருவான இடம் பற்றிய உண்மையை அமெரிக்க அரசியலாளர்கள் மறைக்க விரும்புகின்றனர். இவ்வைரஸ் உருவான இடம் அமெரிக்காவாக இருக்க கூடும் என்பதை அண்மையில் மேலதிகமான சான்றுகள் எடுத்துக் கூறுகின்றன.

அமெரிக்காவின் அரசியலாளர்களில் சிலர், சீனா வெளியிட்ட அறிக்கைகளை சரியாக படித்து, சீனா தேசிய புகழையும் தேசிய நலனையும் பேணிக்காக்கும் மனவுறுதியை சரியாக மதிப்பீடு செய்ய வேண்டும். இவ்வைரஸ் எங்கிருந்து வந்தது என்பது குறித்து அறிவியல் ஆய்வு முடிவுகள் பதிலளிக்கும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்