சீன ஊடகங்களின் மீது அமெரிக்காவின் செயலுக்கு சீனாவின் எதிர் வழிமுறை உரியதானது

ஜெயா 2020-03-18 19:07:22
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவில் உள்ள சீன செய்தி ஊடகங்களுக்கு தடை விதித்துள்ளதைக் கண்டித்து, சீன வெளியுறவு அமைச்சகம் 18ஆம் நாள் 3 பதில் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இது, எதிர்பார்த்தது தான்.

கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்காவிலுள்ள சீன செய்தியாளர்கள் அந்நாட்டின் சட்ட விதிகளையும், செய்தித் துறையின் நெறிமுறைகளையும் பின்பற்றி வருகின்றனர். அமெரிக்க மக்களுக்கு சீனாவின் நிகழ்வுகளை வழங்கியதோடு, சீன மக்களுக்கு அமெரிக்காவின் உண்மையான நிலைமை பற்றியும் அறிமுகப்படுத்தினர். இரு நாட்டு மானிட பரிமாற்றத்துக்கு முக்கிய பங்காற்றி வந்தனர். ஆனால், 2018ஆம் ஆண்டு முதல், அமெரிக்கா, சீன செய்தி ஊடகங்களுக்கு அதிகமான தடை விதித்தது. சீன செய்தி ஊடகங்களின் செயல்கள் இதற்கு காரணம் இல்லை. இது, அமெரிக்காவின் சொந்த நெடுநோக்குடன் தொடர்புடையது தான்.

அமெரிக்கா 2017ஆம் ஆண்டு டிசம்பர் வெளியிட்ட “தேசிய பாதுகாப்பு நெடுநோக்கு அறிக்கையில்” அமெரிக்காவின் நெடுநோக்கு போட்டி எதிரியாக சீனாவை குறிப்பிட்டுள்ளது. அதற்குப் பின், சீனாவின் மீது, அரசியல், பொருளாதாரம், அறிவியல் முதலிய துறைகளில் பல்வேறு தடை நடவடிக்கைகளை படிப்படியாக அமெரிக்கா தீவிரமாக்கியது.

பிரான்ஸின் சர்வதேச பிரச்சினை நிபுணரும், சீன-ஐரோப்பிய கருத்தரங்கு நடத்தியவருமான டாவிட் கொச்செட் கூறுகையில்,இது, அமெரிக்காவின் வலிமையான ஆற்றலைக் காட்டவில்லை. மாறாக, இது, அமெரிக்காவின் பலவீனத்தைக் காட்டுகிறது என்று சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறுகையில், உண்மை மென்மேலும் தெளிவாக இருக்கிறது. அதாவது, 21ஆவது நூற்றாண்டில் சீனாவை கண்டு அஞ்சும், மேலை நாடுகளின் சொந்த பாதுகாப்பற்ற உணர்வினை எடுத்துக்காடுகிறது என்றும் கூறினார்.

சீனாவின் செய்தி ஊடகங்களுக்கு தடை விதிப்பது, நீண்டகாலமாக சீனா வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் மீது தடை விதிப்பதற்கான பதிலடியாகும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் தெரிவித்தனர். ஆனால், வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் உள்ளபடியாக சீனாவை பற்றி செய்தி வெளியிடுவதை சீனா எப்போதும் வரவேற்கிறது. சர்வதேச பழக்கவழக்கப்படி, சட்ட விதிகளைப் பின்பற்றி, பல்வேறு நாடுகளின் செய்தியாளர்கள் சீனாவில் இயல்பான செய்தி வெளியீட்டுக்கு ஆதரவு மற்றும் வசதிகளை சீனா வழங்கி வருகிறது. தற்போது, நூற்றுக்கணக்கான வெளிநாட்டு செய்தியாளர்கள் சீனாவில் நிரந்தரமாக தங்கி இருக்கின்றனர்.

தற்போது, சீனாவின் பதில் மேலும் வெளிப்படையாக இருக்கிறது. தொல்லையை உருவாக்குவது இது அல்ல. இதைப் பயன்படுத்தி, அமெரிக்காவின் தவறான செயல்களை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பது தான் என்று ஆய்வாளர்கள் கூறினர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்