வைரஸ் பரவல், இனம், தோல் நிறம், செல்வம் ஆகியவற்றுடன் தொடர்பில்லை

2020-03-22 20:34:12
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் மார்ச் 16ஆம் நாள் தனது சுட்டுரையில் புதிய ரக கரோனா வைரஸை சீன வைரஸ் என அவதூறாகப் பதிவேற்றியதை அடுத்து, அமெரிக்காவிலும் இதர நாடுகளிலும் பல விமர்சனங்கள் எழுந்தன. 2016ஆம் ஆண்டு அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலின் போது டிரம்புடன் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹில்லரி க்ளின்டன் இது பற்றி கூறுகையில், கரோனா வைரஸ் தடுப்பில் தனது தவறான செயல்களை மூடிமறைக்கும் விதமாக அவர் இனவெறி கூற்றைத் தெரிவித்துள்ளதாகவும், டிரம்பின் கூற்றை நம்பி ஏமாறாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் கூற்று குறித்து உலகச் சுகாதார அமைப்பைச் சேர்ந்த அவசர நிலைத் திட்டத்துக்கான பொறுப்பாளர் மைக்கேல் ரியான் பேசுகையில், வைரஸை இனம் மற்றும் பிரதேசத்துடன் ஒன்றிணைக்கக்கூடாது என்றார்.

வைரஸ் பரவலுக்கு எல்லை இல்லை. இனம், தோல் நிறம், செல்வம் ஆகியவற்றுடன் தொடர்பில்லை. 2009ஆம் ஆண்டு பரவிய எச்1என்1 காய்ச்சல், வட அமெரிக்காவில் முதல்முறையாகத் தோன்றியது. ஆனால், இது அமெரிக்கக் காய்ச்சலாக அழைக்கப்படவில்லை. தற்போது மக்கள் ஒரு மனத்துடன் கரோனா வைரஸ் பரவலை எதிர்க்க வேண்டும். பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்