அமெரிக்காவில் 33073 பேருக்கு கொவைட்-19 பாதிப்பு

மோகன் 2020-03-23 15:37:05
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, 22ஆம் நாள் வரை, அமெரிக்காவில் கொவைட்-19 நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 33073ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் தற்போது கொவைட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 33 விழுக்காட்டினர் நியூயார்க்கில் உள்ளனர். குறுகிய காலத்தில் இந்த நிலைமை எந்த முன்னேற்றமும் அடையாமல் இருக்கும் என்று நியூயார்க் மாநகராட்சித் தலைவர் டி ப்ளாசியோ 22ஆம் நாள் தெரிவித்தார். ராணுவ மருத்துவப் பணியாளர்களை அனுப்புமாறு வெள்ளை மாளிகைக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் கொவைட்-19 கடுமையாகப் பாதிக்கப்பட்ட வாஷிங்டன், கலிபோர்னியா, நியூயார்க் உள்ளிட்ட பிரதேசங்களுக்கு தேசிய காவல் படைப்பிரிவுகளை அனுப்பி, தொற்று நோய் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளுக்கு உதவி அளிப்பதாக அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் 22ஆம் நாள் அறிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்