G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி தலைவர்கள் காணொலி கலந்துரையாடல் கூட்டம்

மோகன் 2020-03-24 10:19:07
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

G20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி தலைவர்கள் 23ஆம் நாள் காணொலி மூலம் கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை நடத்தினர். இதில் புதிய ரக கரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு குறித்து அவர்கள் விவாதித்து, நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதன் முலம் உலக அறை கூவல்களைக் கூட்டாக சமாளிக்க ஒப்புக்கொண்டனர்.

நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் நாடான சௌதி அரேபியா இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கியது. சௌதி அரேபியா நிதி அமைச்சர் முகமது ஜாதன் கூறுகையில், G20 அமைப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இவ்வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் உதவி வழங்கி, உலக பொருளாதாரம் மற்றும் நாணய சந்தையை பேணிக்காத்து, நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்கவும் வேண்டும் என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்