புதிய ரக கரோனா வைரஸ் பரவலின் உலக நிலைமை

மோகன் 2020-03-24 13:27:04
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகில் புதிய ரக கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,34,981ஐ எட்டியது. இவர்களில் 14,510 பேர் உயிரிழந்தனர். இது வரை, 189 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்று உலக சுகாதார அமைப்பு 23ஆம் நாள் தெரிவித்தது.

கடந்த பல பத்து ஆண்டுகளாக பிரிட்டன் எதிர்நோக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் புதிய ரக கரோனா வைரஸ் பரவலாகும். எல்லா சமூக செயல்பாடுகளையும் ரத்து செய்து அனைத்து மக்களும் வீட்டிலேயே இருக்க வேண்டுமென பிரிட்டன் தலைமையமைச்சர் போரிஸ் ஜான்சன் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். அத்தியாவசியமற்ற பொருட்களை விற்கும் அனைத்து கடைகளையும் மூட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அதேநாள் பிரான்ஸ் தலைமையமைச்சர் பிலிப் கூறுகையில், 24ஆம் நாள் முதல், புதிய விதி அமல்படுத்தப்படும். அதன்படி அனைத்து திறந்தவெளி உணவு சந்தைகளும் மூடப்படும் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்