சீன-இந்திய வெளியுறவு அமைச்சர்களுக்கிடையிலான தொடர்பு

ஜெயா 2020-03-25 09:23:42
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மார்ச் 24ஆம் நாள் சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் தொலைப்பேசியின் மூலம் தொடர்பு கொண்டார்.

வாங்யி கூறுகையில், இந்திய தலைமையமைச்சர் மோடி, சீன மக்கள் கொவைட்-19 நோயுடன் போராட்டம் நடத்திய முக்கிய காலத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்கு ஆறுதல் கடிதத்தை அனுப்பினார். சீன மக்களுக்கு இந்தியா செய்த உதவிக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம் என்று தெரிவித்தார். தற்போது, இந்தியாவில் கொவைட்-19 நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சீனா இந்தியாவுக்கு ஆழந்த ஆறுதல் தெரிவித்தது. மேலும் இந்தியா மேற்கொண்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கைகளை வெகுவாகப் பாராட்டுகிறது. மோடியன் தலைமையில், இந்திய மக்கள், வெகுவிரைவில் நோய்க்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவது உறுதி என்று நாம் நம்புகிறோம். தொடர்புடைய நோய் தடுப்பு அனுபவங்களைத் இந்தியாவுடன் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு, இந்தியாவுக்கு இயன்ற அளவில் உதவி செய்வோம் என்று வாங்யி கூறினார்.

ஜெய்சங்கர் கூறுகையில், பன்முகமான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நோய் பரவலைத் தடுத்து, பொருளாதார வளர்ச்சிக்கான பாதிப்பைக் குறைக்க இந்தியா பாடுபட்டு வருகிறது. சீனா வழங்கிய மருத்துவச் சிகிச்சைப் பொருட்கள் மற்றும் உதவிக்கு இந்தியா நன்றி தெரிவிக்கிறது. சீனாவின் அனுபவங்களைப் பயன்படுத்தி, சர்வதேசச் சமூகத்துடன் இணைந்து, நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையான, உறுதியான, பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா விரும்புவதாக ஜெய்சங்கர் கூறினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்