கசகஸ்தான், போலந்து மற்றும் பிரேசில் அரசுத் தலைவர்களுடன் ஷிச்சின்பிங் தொடர்பு

ஜெயா 2020-03-25 10:09:52
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 24ஆம் நாளிரவு கசகஸ்தான் அரசுத் தலைவர் டோக்காயேவுடன் தொலைப்பேசியின் மூலம் தொடர்பு கொண்டார். ஷிச்சின்பிங் கூறுகையில், தற்போது, கசகஸ்தானிலும் கொவைட்-19 நோய் பரவத் தொடங்கியுள்ளது. அரசுத் தலைவரின் தலைமையில், கசகஸ்தான் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது, அனைத்து மக்களுக்கான பொறுப்பு ரீதியான மனப்பான்மையைக் காட்டுகிறது. இதை சீனா வெகுவாகப் பாராட்டுகிறது. கசகஸ்தானுக்கு சீனா ஆதரவு மற்றும் உதவிகளை வழங்கும் என்று சுட்டிக்காட்டினார்.

டோக்காயேவ் கூறுகையில், ஷிச்சின்பிங்கின் தலைமையில், சீனா இந்நோய் தடுப்பில் சிறந்த சாதனைகளைப் பெற்று, உலக மக்களுக்கு நம்பிக்கையையும் விருப்பத்தையும் வழங்கியுள்ளது. சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நோய் பரவலை முறியடிக்க கசகஸ்தான் விரும்புவதாக தெரிவித்தார்.

அன்றிரவு ஷிச்சின்பங் போலந்து அரசுத் தலைவருடன் தொலைப்பேசியின் மூலம் தொடர்பு கொண்ட போது, நோய் தடுப்பில் போலந்து அரசு மற்றும் மக்களின் முயற்சிக்கு சீனா உறுதியாக ஆதரவளித்து வருகிறது. போலந்து உள்ளிட்ட உலக நாடுகளுடன் நோய் தடுப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உலக பொது சுகாதாரப் பாதுகாப்பைக் கூட்டாகப் பேணிக்காக்க சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் கூறினார்.

அன்றிரவு, பிரேசில் அரசுத் தலைவரின் அழைப்பின் பேரில் ஷிச்சின்பிங் தொலைப்பேசியின் மூலம் அவருடன் தொடர்பு கொண்ட போது, பிரேசில் நாட்டின் நோய் பரவல் நிலவரம் குறித்து நான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். பிரேசில் நோய் பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்த முடியும் என்று நான் விரும்புகிறேன். பிரேசிலுக்கு இயன்ற அளவில் உதவி வழங்க சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்