“சீன வைரஸ்” என்று அழைக்க மாட்டேன்:டிரம்ப்

ஜெயா 2020-03-26 09:29:09
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் அண்மையில் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது, இனிமேல் “சீன வைரஸ்” என கூற மாட்டேன் என்று கூறினார். இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கேங் ஷுவாங் 25ஆம் நாள் கூறுகையில், சீனாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் மனப்பான்மையை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம். சீனா மற்றும் சர்வதேசச் சமூகத்துடன் அமெரிக்கா இணைந்து, நோயால் ஏற்பட்டுள்ள அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளித்து, உலக பொது சுகாதாரத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

வைரஸுக்கு எல்லைகள் கிடையாது, அதற்கு இனங்களும் தெரியாது. மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே இதைத் தோற்கடிக்க முடியும் என்று கேங் ஷுவாங் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்