ஷிச்சின்பிங்-மெர்க்கெல் தொடர்பு

மோகன் 2020-03-26 10:27:03
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் ஜெர்மன் தலைமையமைச்சர் மெர்க்கெல் அம்மையாரும் 25ஆம் நாளிரவு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினர்.

புதிய ரக கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலத்தில் சீனாவுக்கு ஜெர்மனி ஆறுதல் மற்றும் ஆதரவைத் தெரிவித்தது. மேலும், ஜெர்மனி அரசும் பல்வேறு துறைகளும் உதவிகளையும் வழங்கின. இதனைச் சீனர்கள் எப்போதும் மறக்க மாட்டர். தற்போது, கொவைட்-19 நோயால் ஜெர்மனி கடும் அறைகூவல்களை எதிர்நோக்கியுள்ளது. ஜெர்மனிக்கு சீனா ஆதரவு அளிப்பதுடன் இயன்ற உதவிகளையும் வழங்கும் என்று ஷிச்சின்பங் கூறினார்.

வைரஸ் பரவலுக்கு எல்லைகள் கிடையாது. ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, தொற்று நோய் பரவலைக் கூட்டாக எதிர்த்து, சர்வதேச சமூக நம்பிக்கையை உயர்த்த சீனா விரும்புகிறது என்று ஷிச்சின்பிங் கூறினார்.

மெர்க்ல் கூறுகையில், சீனா வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். சீனாவுடன் இணைந்து, தொடர்புடைய தடுப்பூசி மற்றும் மருந்துகளின் ஆய்வு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்ள ஜெர்மனி விரும்புகிறது. சர்வதேச ஒத்துழைப்பு மூலம் தொற்று நோய் பரவலைக் கூட்டாகச் சமாளிக்க வேண்டும் என்று மெர்க்கெல் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்