கொவைட் – 19 நோய் தடுப்பு – ஷி ச்சினிபிங் முக்கிய ஆலோசனை

கலைமணி 2020-03-27 17:33:33
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய ரக கரோனா வைரஸ் பாதிப்பைச் சமாளிப்பது தொடர்பாக 20 நாடுகள் குழுவின் சிறப்பு உச்சி மாநாடு 26ஆம் நாள் நடைபெற்றது. உலக அளவில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் இந்த முக்கிய காலத்தில், முக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் முதல்முறையாக காணொளிவழி கலந்தாய்வு மேற்கொண்டனர். வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து சர்வதேச ஒத்துழைப்பு மேற்கொள்வதும் பொருளாதாரத்தை நிதானப்படுத்துவதும் அவர்களின் நோக்கமாகும்.

உலகில் கரோனா வைரஸ் பரவலைச் உரிய முறையில் தடுக்க வேண்டும். இதற்கு சர்வதேச ஒத்துழைப்பை முன்னேற்ற வேண்டும். சர்வதேச அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பல்வேறு நாடுகள் தங்களது ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கையின் மீதான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று இவ்வுச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் தெரிவித்தார். இதில் அவர் வழங்கிய 4 முன்மொழிவுகள், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் உலக பொருளாதார நிதானம் ஆகியவற்றை மையப்படுத்தி அமைந்தன. இவை தற்போதைய அவசர நிலைமையைச் சமாளிப்பதற்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் உதவும் விதமாக உள்ளன.

வைரஸ் மனிதரின் கூட்டு எதிரியாகும். முன்பை விட, இப்போது சர்வதேச சமூகத்திற்கு ஒற்றுமையும் ஒத்துழைப்பும் தேவை. உலகின் வளர்ந்த நாடுகள் மற்றும் புதிதாக வளரும் நாடுகளின் சார்பாக, 20 நாடுகள் குழு தலைமையாற்றலை வெளிகாட்டி இவ்வுச்சி மாநாட்டில் எட்டியுள்ள பொதுக் கருத்துகளை நடைமுறைப்படுத்தி வைரஸ் பரவலைத் தடுப்பதற்குப் பங்காற்ற வேண்டும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்