கொவைட்-19 நோய் உலகப் பொருளாதாரத்துக்கான பாதிப்பு

ஜெயா 2020-04-02 10:22:19
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நா பொருளாதார மற்றும் சமூக விவகார துறையின் துணைப் பொதுச் செயலாளர் லியூசென்மின், ஏப்ரல் முதல் நாள் செய்தியாளர் கூட்டத்தில், கொவைட்-19 நோய் பரவலால் பொருளாதாரத்துக்கும் தொடரவல்ல வளர்ச்சிக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றி அறிமுகப்படுத்தினார்.

ஐ.நா பொருளாதார மற்றும் சமூக விவகார துறை அன்று வெளியிட்ட புதிய ஒட்டுமொத்தப் பொருளாதார மாதிரியின் மதிப்பீட்டின்படி, இந்நோய் பரவலால் இவ்வாண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி 1 விழுக்காடு சரிவடையும். ஆய்வின்படி, தீவிரமாக பரவும் இந்நோயினால் பொருளாதார சரிவு, வருமானமின்மை ஆகியவை ஏற்படும். இதன் காரணமாக, உலகம் முழுவதும் பொருளாதாரம் பற்றிய கவலை தீவிரமாகியுள்ளது. கரோனா வைரஸ் கடுமையாக பாதித்த இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற அதிக வருமானம் கொண்ட நாடுகளிலும், 27 முதல் 40 விழுக்காட்டு மக்கள் 3 மாதங்கள் வேலை இழப்பால் கஷ்டப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்