கரோனா வைரஸ் பரவலைத் தடுத்த சீன அனுபவம்

கலைமணி 2020-04-03 15:10:10
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அண்மையில் ச்சே ஜியாங் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணி மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிப் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். அவசரமில்லாதப் பணிகளைத் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

நவ சீனா நிறுவப்பட்ட பிறகு இதுவரை சந்திக்காத சுகாதார பேரிடரை சீனா எதிர்கொள்கிறது. அதிவேகமாகவும் மிக பெரியளவிலும் பரவி வரும் கரோனா வைரஸைத் தடுப்பது, சீனாவின் கட்டுப்பாட்டு ஆற்றலுக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாகும். கடினமான முயற்சியின் மூலம், சீனாவில் தற்போது கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநரின் உயர் நிலை ஆலோசகர் அல்வார்த் சீனாவில் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட போது, பேரிடர் காலத்தில் சீன தலைவர்கள் எடுத்த தெளிவான முடிவையும் வைரஸ் பரவலைத் தடுப்பதில் சீன அரசு மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பையும் பாராட்டினார்.

சீனா கரோனா வைரஸ் பரவலைத் விரைவாக தடுத்து, நாட்டின் அமைப்பு முறையின் ஆற்றலை வெளிகாட்டியுள்ளது என்று அண்மையில், அமெரிக்காவின் ஸ்டன்வோர்த் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிஞர் ரவி வேரிய ஜாக் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்