புகழ் இழந்து வருகின்னற அமெரிக்கா

கலைமணி 2020-04-13 18:52:50
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கரோனா காலத்தில், அமெரிக்கா, இதர நாடுகள் மீது அவதூறு பரப்பி வருகின்றது. அமெரிக்காவின் இச்செயல் அதன் புகழைப் பாதித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அமெரிக்க தூதாண்மையின் ஒழுக்க நெறி தவறியதற்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று மேலதிகமான மக்கள் கருதுகின்றனர். கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் பாம்பியோவின் தோல்விகளை அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கை குற்றஞ்சாட்டியது. அவர் அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான வெளியுறவு அமைச்சராவார் என்று இப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் வடக்கிழக்கு ஆசிய நிலைமை கரோனா வைரஸ் பரவி வரும் போது சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை குறித்து அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பியோ, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கொள்கையை படிப்படியாகவும் ரகசியமாகவும் மாற்றி வருகின்றார். அவர், அவருடைய அரசியல் பேராசையை நனவாக்கும் போது, அமெரிக்க தூதாண்மைக்கும் அமெரிக்க தலைவர்களின் புகழுக்கும் கேடு விளைவித்துள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்