கரோனா வைரசைத் தடுப்பதில் அமெரிக்கா செய்த மூன்று பெரும் பிழைகள் மறைக்க முடியாதவை

சரஸ்வதி 2020-04-14 12:37:16
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே, சீனா மீது அமெரிக்காவின் அரசியல்வாதிகள் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரமாகி வருகின்றன.

கரோனா வைரஸ் பரவலால் ஏற்படும் பாதிப்புகளுக்குச் சீனாவே காரணம் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால், உண்மை வேறு. கரோனா வைரஸ் பரவல் தடுப்பில் சீனாவின் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளுக்கு, உலகச் சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேசச் சமூக அமைப்புகள் நியாயமான மதிப்பளித்துள்ளன.

பொதுத் தேர்தலுக்கான புதிய தந்திரத்தை, அமெரிக்க அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதாவது, சீனாவை, உலகளாவிய நோய் தொற்று ஏற்படுவதற்குரிய அடிப்படை காரணமாகவே மாற்ற அமெரிக்க அரசு முயன்று வருகிறது. ஆனால், அமெரிக்கா, உள்நோக்கத்துடன் வெளியிடும் தவறான கருத்துகளால், சர்வதேசச் சமூகத்தை ஏமாற்ற முடியாது. மேலும், கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் அமெரிக்கா செந்த 3 பெரும் பிழைகளை மறைக்க முடியாது.

முதலாவதாக, அறியாமை மற்றும் ஆணவம் ஆகியற்றால், அமெரிக்காவில் நோய் தடுப்புப் பணி தாமதமாகத் தொடங்கப்பட்டு, கிட்டத்தட்ட 2 திங்கள் காலம் வீணானது. இரண்டாவதாக, அமெரிக்க அரசியல் கட்சிகளுக்கிடையில் உருவான சர்ச்சைகள் காரணமாக அமெரிக்கா தடுப்புப் பணியில் மிகுந்த கவனம் செலுத்தவில்லை. மூன்றாவதாக, அமெரிக்காவுக்கே எப்போதும் முன்னுரிமை என்ற கோட்பாட்டில் ஊன்றி நின்றதன் வழி நோய் தடுப்புப் பணிக்கான ஒத்துழைப்பில் தங்களுக்குத் தாமே தீங்கினைத் தேடிக் கொண்டமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

மேலும், அமெரிக்காவில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர் மக்களின் உயிரைப் பேணிக்காப்பதில் போதுமான கவனம் செலுத்தவில்லை. இதன் விளைவாக, அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணி மோசமான நிலையில் சிக்கியுள்ளது என்று அமெரிக்காவின் செய்தி இணையதளமான தி டெய்லி பீஸ்ட் 12ஆம் நாள் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்