ஒத்துழைப்பு கரோனா வைரஸை அழிக்கும் ஆயுதம்: ஷி ச்சின்பிங்

கலைமணி 2020-04-15 21:18:51
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், சீன அரசுத் தலைவரும் சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் எழுதிய கட்டுரை ஏப்ரல் 16ஆம் தேதியிட்ட ஜியு சி இதழில் வெளியாக உள்ளது. ஒற்றுமையும் ஒத்துழைப்பும் கரோனா வைரஸை அழிப்பதற்கான சர்வதேச சமூகத்தின் வலிமைமிக்க ஆயுதமாகும் என்பது, இக்கட்டுரையின் தலைப்பாகும்.

உலகின் எல்லா மக்களும், மனித நேய விதிக்குட்பட்ட சமூகத்தில் வசிக்கின்றனர். கரோனா வைரஸை அழிப்பது, எல்லா மக்களின் பாதுகாப்புக்கு மிக முக்கியம். ஒற்றுமையும் ஒத்துழைப்பும் கரோனா வைரஸை அழிக்கும் சர்வதேச சமூகத்தின் வலிமைமிக்க ஆயுதமாகும். வைரஸ் பரவலுக்கு எல்லை இல்லை. எல்லா நாடுகள் வைரஸ் பரவலை தனியாக தடுக்க முடியாது. சீன அரசு முதலிலேயே நேர்மையாகவும் உண்மையாகவும் உலக சுகாதார அமைப்புக்கும் தொடர்புடைய நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் புதிய ரக கரோனா வைரஸ் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டது. சர்வதேச சமூகம் சீனாவுக்கு அளித்த உதவிக்கு சீனா நன்றி தெரிவித்து கொள்கிறது. சீனா காலதாமதமின்றி சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, கரோனா வைரஸ் பரவலைத் தடுத்துள்ளது என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்