சீன பொருளாதார மீட்சிக்கான ஆக்கம்

கலைமணி 2020-04-16 18:38:36
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் தற்போது கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணி நிதானமடைந்துள்ளது. பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் ஒழுங்கு மீட்சியடைத்து வருகின்றது. சீனாவின் இவ்வாண்டு பொருளாதார வளர்ச்சியின் இலக்கை நனவாக்கும் நம்பிக்கை என்ன? என்பது பற்றி இப்போதைய வூஹான் மாநகரத்தின் நிலைமை உங்களுக்கு விவரிக்கும்.

கடந்த வார இறுதியில், நமது கடையின் விற்பனை தொகை 10 ஆயிரம் யுவானாகும். வைரஸ் பரவலுக்கு முந்தைய நிலைக்கு இது திரும்பியுள்ளது என்று வூஹான் மாநகரிலுள்ள ஒரு காலணி கடையின் பணியாளர் ஒருவர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

சீன தொழில் நிறுவனங்கள் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணி புரிந்ததோடு பல்வேறு வழிமுறைகளின் மூலம், வர்த்தகம் செய்து வருகின்றன. நிறைய உணவகங்கள், இணையத்தளத்தின் மூலம் உணவுகளை விற்பனை செய்கின்றன. சில கடைகள், இணையத்தளத்தில் நேரலை செய்து பொருட்களை விற்பனை செய்கின்றன.

அதேவேளை, சீன நடுவண் அரசின் நிதியுதவியின் அடிப்படையில், வூஹான் மாநகரம், வரியைக் குறைப்பது, சலுகை கடன் ஆகிய வழிமுறைகளின் மூலம் சிறு நிறுவனங்களுக்கு உதவி அளித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், உலக பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் பங்கு சுமார் 30 விழுக்காடாகும். சீனா முதலில் கரோனா வைரஸ் பரவலைத் தடுத்த பிறகு, பொருளாதாரத்தை மீட்க தொடங்கியது. இது உலகில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கும் உலக பொருளாதார வளர்ச்சிக்கும் துணை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்