உலகச் சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா உறுப்பினர் கட்டணம் நிறுத்தம்:இது நியாயமா?

இலக்கியா 2020-04-18 15:36:32
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகச் சுகாதார அமைப்புக்கு உறுப்பினர் கட்டணம் தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க அரசுத் தலைவர் ஏப்ரல் 14ஆம் நாள் அறிவித்தார். உள்நாட்டு மக்களின் கவனம் மற்றும் எதிர்ப்பைத் திசைதிருப்பும் விதம் டிரம்பின் இந்த அறிவிப்பு உள்ளது என்று பொதுவாகக் கருதப்படுகிறது.

உலகச் சுகாதார அமைப்பின் மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் எதற்கும் ஆதாரம் இல்லை. இவற்றில், உலகச் சுகாதார அமைப்பு, பொறுப்புணர்ச்சியின்றி கடமையில் தவறி, நோய் பரவல் தகவலை மூடிமறைத்தது என்பது ஒரு குற்றச்சாட்டு. உண்மையில் ஜனவரி 3ஆம் நாள் முதல், சீனா, உலகச் சுகாதார அமைப்புக்கு நோய் நிலைமை பற்றி தெரிவிக்கத் தொடங்கியது. மேலும் ஜனவரி 7ஆம் நாள் முதல், உலகச் சுகாதார அமைப்பு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சுகாதார அதிகாரிகளுக்கு கரோனா நோய் நிலைமை பற்றி வழமையாகத் தெரிவிக்கத் தொடங்கியது. ஆனால், ஜனவரி மற்றும் பிப்ரவரி திங்களில் அமெரிக்கா நோய் பரவலைச் சமாளிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை.

தற்போது உலகளவில் கரோனா நோய் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21.5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. ஆகவே இந்த விஷயத்தில் அரசியல் செய்வதை நிறுத்தி விட்டு, நோய் தடுப்புக்கான சர்வதேச ஒத்துழைப்புடன் அமெரிக்கா இணைந்திருக்க வேண்டும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்