வறுமை ஒழிப்பு இலக்கு நிறைவேற்றம் - சீனாவின் நம்பிக்கை

வாணி 2020-04-23 23:53:08
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டுக்குள் வறுமை ஒழிப்புக்கான நடைமுறை இலக்கை நிறைவேற்றுவில் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 21ஆம் நாள் ஷாஆன்சி மாநிலத்தில் பயணம் செய்த போது தெரிவித்தார்.

திட்டப்படி நாட்டிலுள்ள கொடிய வறுமை மற்றும் முழுமையான வறுமை ஆகியவற்றை ஒழிப்பதற்கான இலக்கை சீனா நிறைவேற்றி, குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தைப் பன்முகங்களிலும் கட்டிமுடிக்க வேண்டும். ஆனால், திடீரென்று தோன்றிய கரோனா வைரஸ் இதற்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஷாஆன்சி மாநிலத்திலுள்ள தொழிற்சாலை, குடியிருப்புப் பிரதேசம், பல்கலைக்கழகம் முதலியவற்றில் பயணம் மேற்கொண்டு வறுமை ஒழிப்புப் பணிக்கு வழிகாடினார்.

வறிய மக்களின் உணவு மற்றும் ஆடை, கட்டாயக் கல்வி, அடிப்படை மருத்துவ சிகிச்சை, வசிப்பிடப் பாதுகாப்பு முதலியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை சீனாவில் மேற்கொள்ளப்பட்ட கடந்த 40 ஆண்டுகளின் அனுபவங்களை மீளாய்வு செய்தால் ஒரு விவரம் மக்களின் கவனத்தை ஈர்ப்பதை அறிய முடியும். அது, இக்காலத்தில் சீனாவில் 80 கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்று ஐ.நா வளர்ச்சித் திட்ட அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாகும்.

இவ்வாண்டு வறுமை ஒழிப்பு இலக்கை சீனா நிறைவேற்றினால், ஐ.நாவின் 2030 தொடர்வல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலைச் சீனா 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிறைவேற்றிட முடியும். மனித குலத்தின் வாழ்க்கை நிலை மேம்பாட்டுக்கான மாபெரும் பங்கு இதுவாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்