சீனா மீது ஸ்டீவ் பன்னோன் அவதூறு

மோகன் 2020-05-03 20:46:41
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க அரசுத் தலைவரின் முன்னாள் உயர்நிலை ஆலோசகர் ஸ்டீவ் பன்னோன் செய்தி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும்போது, கொவைட்-19 விவகாரத்தில், சீனாவின் மீது பழி போட்டு வருகிறார். சீனாவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளை தூற்றும் விதம் கருத்து தெரிவித்து வருகிறார். தீவிர வலதுசாரி சிந்தனையுடைவரான இவரின் கருத்துகள் மிகவும் தீவிரமானவை.

இவ்வைரஸ் உலக அளவில் பரவத் தொடங்கியபோது, இப்பிரச்னையை இவர் அரசியல்மயமாக்கி வருகிறார். இவ்வாறு கூறிவருவது அமெரிக்கா நோயைக் கட்டுப்படுத்த ஒருபோதும் உதவாது. அரசியலில் லாபம் அடையவே இவரைப் போன்ற அரசியல்வாதிகள் இவ்வாறு பொய்க்கூற்றை வெளியிட்டு வருகின்றனர்.

பொய்யை இவர் எப்படிப் பரப்பினாலும் உண்மை ஒருபோதும் மாறாது. சீனா ஒளிவு மறைவின்றி செயல்பட்டு வருகின்றது என்பது அனைவரும் அறிந்த உண்மை ஆகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்