முதல் சர்வதேச தேயிலை தினத்துக்கு ஷிச்சின்பிங்கின் வாழ்த்து

ஜெயா 2020-05-21 14:21:42
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நா இவ்வாண்டு முதல் மே 21ஆம் நாளைச் சர்வதேச தேயிலை தினமாகக் கொண்டாடுவதென முடிவு செய்துள்ளது. இந்நாளை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஷிச்சின்பிங் தன் வாழ்த்துச் செய்தியில் கூறுகையில், சீனாவிலிருந்து உருவான தேயிலை, உலகின் பல்வேறு இடங்களையும் பரவலாகச் சென்றடைந்துள்ளது. இந்நிலையில், மே 21ஆம் நாளை, சர்வதேச தேயிலை தினமாக ஐ.நா அறிவித்திருப்பது, தேயிலை மீதான சர்வதேச சமூகத்தின் மதிப்பினைக் காட்டுகிறது. தேயிலைத் தொழில் மற்றும் பண்பாட்டை வளர்ப்பதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்துள்ளார். தேயிலை உற்பத்தி மற்றும் நுகர்வு அதிகம் கொண்ட நாடான சீனா, பல்வேறு நாடுகளுடன் இணைந்து, உலகத் தேயிலை தொழிலின் தொடரவல்ல சீரான வளர்ச்சியை முன்னேற்றி, தேசியப் பண்பாட்டுப் பரிமாற்றத்தை ஆழமாக்க விரும்புவதாகவும், மேலதிக மக்கள் தேயிலையை அறிந்து கொண்டு, இன்பமான வாழ்க்கையைக் கூட்டாக அனுபவிக்கச் செய்ய விரும்புவதாகவும் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்