நிதானமாகவுள்ள சீனாவின் தானிய விளைச்சல்

மோகன் 2020-05-22 16:28:03
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டு உலகளவில் ஏற்பட்ட புதிய ரக கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மக்கள் தானிய பிரச்சினையில் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றனர். சில நாடுகள் தானிய சேமிப்பை அதிகரித்து, தானிய ஏற்றுமதியைக் குறைத்துள்ளன. இத்தகு இக்கட்டான நேரத்தில் சீனாவில் தானிய நெருக்கடி ஏற்படுமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சர் ஹான் சாங்ஃபூ 22ஆம் நாள் சீனாவின் 13ஆவது தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத் தொடரின் போது செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில், சீனத் தானிய விளைச்சல் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து 65 கோடி டன்னுக்கு மேல் உள்ளதாகவும், நபர்வாரி தானிய அளவு சர்வதேச தானிய பாதுகாப்பு வரையறையைத் தாண்டி காணப்படுவதால் சீனாவில் தானிய நெருக்கடி ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

மேலும், தானிய உற்பத்திக்கு எப்போதுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஹான்சாங்ஃபூ, இவ்வாண்டு, தானிய உற்பத்தியை நிலைநிறுத்துவதற்கான சிறப்பு நடவடிக்கைளின் மூலம், வசந்தகால சாகுபடியும் தொற்றுநோய்த் தடுப்புப் பணியும் சீராக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்