அமெரிக்கா திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது பற்றிய ரஷியாவின் கருத்து

தேன்மொழி 2020-05-23 16:23:38
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

திறந்த வான்வெளி என்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவது தொடர்பாக அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வக் கடிதத்தைப் பெற்றுள்ளதாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் மே 22-ஆம் நாள் தெரிவித்ததுள்ளது. மேலும் இக்கடிதத்தில் வரும் நவம்பர் 22-ம் நாளுக்குள், தாங்கள் முன்வைத்த நிபந்தனைகளை ரஷியா பூர்த்தி செய்யா விட்டால், அமெரிக்கா இவ்வொப்பந்தத்தில் இருந்து விலகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் சேர்கை லியபுகோவ் கூறுகையில், திறந்த வான்வெளி என்ற ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள ரஷியா விரும்புகின்றது. ஆனால், அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகளை ரஷியா ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்