கரோன வைரஸ் தடுப்பூசி ஆய்வில் சீனா முன்னேற்றம்

பூங்கோதை 2020-06-04 21:02:43
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கரோன வைரஸ் பாதிப்பைச் சமாளிப்பதற்கான சீன மத்திய அரசின் தலைமைக்குழு ஜுன் 4ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. தற்போது, தடுப்பூசி ஆய்வு பற்றிய பரிசோதனை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைத்துள்ளது. அறிவியல் விதிகளைப் பின்பற்றி, சட்டப்படி மருத்துவச் சோதனையை முன்னேற்றி, வெகு விரைவில் முன்னேற்றத்தைப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்று இக்கூட்டத்தில் கேட்டு கொள்ளப்பட்டது.

மேலும், தற்போது சீனாவில் கரோனா வைரஸ் பரவல் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அடுத்து, இவ்வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, சுற்றுலா, பண்பாடு, விளையாட்டு உள்ளிட்ட துறைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதை முன்னேற்ற வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்