சீனாவின் உதவிக்கு இலங்கை நன்றி

மோகன் 2020-06-19 10:18:49
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கைக்கான சீனத் தற்காலிகத் தூதர் ஹுவெய் 18ஆம் நாள் இலங்கை அரசுத் தலைவர் கோட்டபய ராஜபக்சவைச் சந்தித்துரையாடினார்.

அப்போது பேசிய கோட்டபய, சில நாட்களுக்கு முன், பெய்ஜிங்கில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கிய போதிலும், சீன அரசு, அதை உரிய முறையில் கட்டுப்படுத்தும் என்பதில் இலங்கை முழு நம்பிக்கைக் கொண்டுள்ளது எனத் தெரிவித்தார். அதோடு,  தொற்று நோய் தடுப்பில் இலங்கைக்கு மாபெரும் உதவிகளை வழங்கிய சீன அரசு, தூதரகம், நிறுவனங்கள் ஆகியவைகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும், நாணயம், முதலீடு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்புகளுக்கிடையிலான ஒத்துழைப்பு முன்னேற்றத்தைப் பெற்று வருவதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், இதற்கென தொடர்ந்து நல்ல வர்த்தகச் சூழலையும் கொள்கைகளையும் வழங்க இலங்கை விரும்புவதாகவும் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்