அமெரிக்காவின் தாங்குதல் நடவடிக்கைகள்

மோகன் 2020-06-27 20:52:15
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அண்மையில், அமெரிக்க செனெட் அவை “ஹாங்காங் தன்னாட்சி மசோதாவை”ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் ஹாங்காங் தன்னாட்சியை சீர்குலைக்கும் தனிநபர் மற்றும் நாணய நிறுவனங்கள் மீது தடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இத்தகைய அமெரிக்காவின் மேலாதிக்க நடவடிக்கைகள் சீன உள் விவகாரத்தில் குறுக்கீடு செய்து, சர்வதேச சட்டம் மற்றும் உறவின் அடிப்படை கோட்பாடுகளை கடுமையாக மீறியுள்ளது. அமெரிக்க அரசியல்வாதிகள் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கை சீர்குலைக்கும் தீய நோக்கத்தை இது மேலும் எடுத்துக்காட்டுகிறது. சர்வதேச சமூகம் இதற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றது.

பிரிட்டனின் புகழ்பெற்ற அறிஞர் மார்டீன் ஜேக்கியூஸ் கூறுகையில், “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கை ஹாங்காங் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சிறந்த வழிமுறையாகும். சீனத் தேசிய பாதுகாப்பை ஹாங்காங் பேணிக்காப்பது பற்றிய சட்டம் ஹாங்காங்கின் நிதானத்தையும் பாதுகாப்பையும் உயர்த்தும். அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள் முன்வைத்த ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் உலகளவில் தனது வலிமையைத் தாறுமாறாக பயன்படுத்துவதற்கான சாக்குப்போக்காகும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்