கிரிபாதி அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்துச் செய்தி

வான்மதி 2020-06-28 18:06:11
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கிரிபாதி அரசுத் தலைவராக மீண்டும் பதவியேற்றுள்ள தேனெதி மாமௌவுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

இச்செய்தியில், சீன-கிரிபாதி தூதாண்மை உறவு கடந்த ஆண்டு செப்டம்பரில் மீண்டும் தொடங்கப்பட்ட பிறகு, இருநாட்டுறவு விரைவாக வளர்ந்து வருகிறது. பல்வேறு துறைகளிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு செழிப்பான சாதனைகளைப் பெற்றுள்ளது. கொவைட்-19 நோய்த் தடுப்பில் இருநாடுகள் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, நட்புறவை வெளிப்படுத்தியுள்ளன. கிரிபாதியுடன் இணைந்து பாடுபட்டு இருநாட்டுறவை புதிய நிலைக்குக் கொண்டு சென்று, இருநாட்டு மக்களுக்கு நலன்களைக் கொண்டு வர சீனா விரும்புகிறது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்