சீனப் பொருளாதாரம் உயர்வேகத்தில் மீட்சி

மோகன் 2020-06-28 20:15:14
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனப் பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சகம் 27ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, டிராகன் படகு விழாவுக்கான 3 நாட்கள் விடுமுறையில் சீனாவில் பயணம் மேற்கொண்டோரின் எண்ணிக்கை 4 கோடியே 88 லட்சத்து 9000ஐ எட்டியது. இதில் கிடைத்த வருமானம் 1228 கோடி யுவானை அடைந்தது. சீனப் பொருளாதாரம் உயர்வேகத்தில் மீட்சி அடைந்து வருகின்றது. புதிய வளர்ச்சிப் போக்கு உருவாகின்றது.

இவ்வாண்டு முதல், புதிய ரக கரோனா வைரஸ் பரவல் பாதிப்பால், சீன நுகர்வு சந்தை மாபெரும் பாதிப்பைச் சந்தித்தது. தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணிகள் முக்கிய சாதனைகளைப் பெற்று வருவதுடன், நுகர்வுச் சந்தையும் மீட்சி பெற்று வருகின்றது.

அத்துடன், சீன நுகர்வுத் துறையின் தர உயர்வு தொடர்கிறது. பொருள் வாங்குதல், உணவகம் ஆகிய பாரம்பரிய நுகர்வு துறையின் தரம் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. சுற்றுலா, பண்பாடு ஆகியவை தொடர்பான புதிய நுகர்வு வழிமுறைகளும் அடுத்தடுத்து தோன்றி வருகின்றன.

பல காரணிகள் காரணமாக, சீன பொருளாதாரம் உயர்வேகத்தில் மீட்சி அடைகின்றது. சீனப் பொருளாதாரத்தின் உறுதியான தன்மை, உள்ளார்ந்த ஆற்றல், பரந்துபட்ட எதிர்காலம் ஆகியவற்றை இது வெளிப்படுத்தி, உலக சந்தையின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது.

தொற்று நோயில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசு, மக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் உடல் நலத்துக்கு முன்னுரிமை அளித்து வருகின்றது. அறிவியல் மற்றும் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட்ட தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியும், உற்பத்தி மீட்சியும், பொருளாதாரத்தின் உயர்வேக மீட்சிக்கு சீரான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன என்று பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தவிரவும், சீனா வெளிநாட்டுத் திறப்பை விரைவுபடுத்தி, உலகப் பொருளாதாரத்துக்கு இயக்காற்றலை வழங்கி வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்