சின்ஜியாங் விவகாரம் குறித்து சீனாவின் நிலைப்பாடு

பூங்கோதை 2020-06-30 18:55:33
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் சீனா மேற்கொண்டுள்ள கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் தவறு என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அண்மையில் குற்றச்சாட்டினார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவ் லீஜியான் 30ஆம் நாள் பேசுகையில், சின்ஜியாங் விவகாரத்தைப் பயன்படுத்தி, சீனா மீது பழி போடுவதை அமெரிக்க அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், சிறுபான்மை தேசிய இனங்கள் உள்ளிட்ட சீனாவின் பல்வேறு தேசிய இன மக்களின் சட்டப்பூர்வ உரிமை நலனை சீனா எப்போதுமே பாதுகாத்து வருகிறது. மைக் பாம்பியோ உள்ளிட்ட அமெரிக்க அரசியல்வாதிகள், அமெரிக்காவிலுள்ள இனவெறி பாகுபாடு பிரச்சினையைச் சரிவர நோக்கி, உள்நாட்டு மக்களின் உரிமை மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்