தகவல் தொழில் நுட்பத்தையும் ஆக்கத் தொழிலையும் ஒருங்கிணைப்பாக வளர்க்க சீனா முயற்சி!

மதியழகன் 2020-07-01 10:21:13
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனப் பொருளாதாரச் சமூக வளர்ச்சிக்குச் சாதகமான சூழலை உருவாக்கும வகையில் சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும். அரசு சார் தொழில் நிறுவனங்கள், புத்தாக்கம் மற்றும் இடர் தடுப்புக்கான திறனை மேம்படுத்த வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், சீர்திருத்தத்தை விரிவாக ஆழமாக்கும் ஆணையத்தின் கூட்டத்தில் ஜுன் 30ஆம் நாள் வலியுறுத்தினார்.

புதிய தலைமுறை தகவல் தொழில் நுட்பத்தையும் உற்பத்தித் தொழிலையும் ஒருங்கிணைப்பாக வளர்ப்பதை விரைவுப்படுத்தவும்,  எண்முறை, இணையமயமாக்கம், நுண்ணறிவுத் திறன் ஆகிய துறைகளில் ஆக்கத் தொழிலை மேம்படுத்தவும் வேண்டும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில், சீனாவின் வேளாண்மை, கிராமப்புறம், கல்வி உள்ளிட்ட துறைகளிலும் சீர்திருத்தங்களுக்கான முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்