ஹாங்காங் சட்டமியற்றல் குழுவுக்கான தேர்தல் ஒத்திவைப்பு

கலைமணி 2020-08-01 16:28:47
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய ரக கரோனா வைரஸின் கடுமையான பரவல் நிலைமையினால், சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் சட்டமியற்றல் குழுவுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி கேரி லாம் சேன் யுத் நகோர் அம்மையார் அறிவித்தார். ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் தற்போதைய நிலைமைக்கிணங்க கொண்டுவரப்பட்ட இத்தீர்மானத்தை ஏற்றுக்கொல்வதாக சீன நடுவண் அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட காலத்தில், சட்டத்தின் படி ஏற்படுத்திய சிறப்பான நடவடிக்கை இதுவே ஆகும். ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேச அரசு, பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது என்பதை இது வெளிகாட்டியுள்ளது. சர்வதேச சூழலுக்கு ஏற்ப இந்நடவடிக்கை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்