புதிய ரக கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து நீண்டகாலமாக நிலவும்: உலகச் சுகாதார அமைப்பு

ஜெயா 2020-08-02 16:38:03
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகச் சுகாதார அமைப்பு ஆகஸ்ட் முதல் நாள் கூறுகையில், புதிய ரக கரோனா வைரஸ் பரவல், பல்வேறு நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டிய திடீர் பொதுச் சுகாதாரப் பேரிடராகவே தொடர்ந்து வருகிறது. இந்நிலைமை நீண்டகாலமாக தொடரக் கூடும். நீண்டகாலச் சமாளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

உலக மற்றும் பிரதேச பலதரப்பு அமைப்புகள் மற்றும் ஒத்துழைப்புக் கூட்டாளிகள் புதிய ரக கரோனா வைரஸ் பரவலுக்கான தடுப்பு மற்றும் சமாளிப்புப் பணியைத் தொடர்ந்து முன்னேற்ற வேண்டும் என்று இவ்வமைப்பின் பேரிடர் ஆணையம் அதே நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உலகச் சுகாதார அமைப்புக்கு முன்மொழிவு விடுத்துள்ளது. இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் சுகாதாரச் சேவையை மேற்கொண்டு, ஆய்வை விரைவுபடுத்தி, மருத்துவச் சிகிச்சை மற்றும் தடுப்பூசியைப் பெறுவதற்கு இது ஆதரவளிக்கும் என்று கூறியது.

உலகச் சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் ஆணையத்தின் முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், புதிய ரக கரோனா வைரஸ் பரவல் நூறு ஆண்டுகளில் கண்டிராத சுகாதார நெருக்கடியாகும். இதன் பாதிப்பு இன்னும் பல பத்து ஆண்டுகளாக தொடரும் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்