சீனா மற்றும் அமெரிக்காவுடனான உறவு குறித்து இந்தியாவின் தீர்மானம்

கலைமணி 2020-08-02 17:23:54
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நியூஸ் 18 என்ற செய்தி ஊடகம் ஜுலை 21ஆம் நாள் வெளியிட்ட கட்டுரையின் படி, அண்மையில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், தற்போதைய உலகில் நிறைய அறைகூவல்கள் உள்ளன. கடந்த 40 ஆண்டு காலத்தில், முக்கிய பொருளாதார நாடுகளின் சக்தி அதிகரித்துள்ளது. சமநிலையில் மீண்டும் இருக்கின்றன என்பது இதற்கு முக்கிய காரணமாகும். உலகமயமாக்கம் நாடுகளுக்கிடையிலான இணைப்பை வலுப்படுத்தியுள்ளது. நாடுகளின் புகழ், ஒட்டுமொத்த ஆற்றல், தூதாண்மை கொள்கை ஆகியவை அடிப்படையில் மாறியுள்ளன என்றார்.

இந்தியா முன்னாள் தலைமை அமைச்சர் ராஜிவ் கந்தி, 1988ஆம் ஆண்டில் சீனாவில் பயணம் மேற்கொண்டார். அவர், இரு நாடுகளுக்கிடையில் போர் ஏற்பட்ட பிறகு சீனாவில் பயணம் மேற்கொண்ட முதல் இந்திய தலைமை அமைச்சர் ஆவார். அப்போது சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரே நிலையில் இருந்தது. ஆனால், இப்போது சீனாவின் பொருளாதார அளவு, இந்தியாவை விட 5 மடங்கு அதிகம். சீனா எட்டியுள்ள சாதனையை இந்தியா பாராட்டுவதோடு, சொந்த பிரச்சினையை யோசிக்க வேண்டும். கடந்த 40 ஆண்டுகாலத்தில் இந்தியாவின் தூதாண்மை கொள்கை பெருமளவில் மாறி விட்டது என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்திய-அமெரிக்க உறவு மிகவும் நெருக்கமானது, இந்தியாவுடனான உறவை, துணை கூட்டாளி நிலைக்கு அமெரிக்கா உயர்த்தியுள்ளது. சீனாவுடனான போட்டியில், அமெரிக்கா மனநிறைவுடைய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளாமல் இருந்தால், இந்திய-அமெரிக்க புதிய உறவு நனவாகாது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்