சீன-ஜெர்மன்-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் பேச்சுவார்த்தையின் சாதனைகள்

2020-09-15 19:35:53
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன, ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் 14ஆம் நாள் காணொலி மூலம் நடத்திய பேசுவார்த்தை குறித்து சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 15ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், இவ்வாண்டுக்குள் சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே நடைபெறும் உயர் நிலை பேச்சுவார்த்தை இதுவாகும் என்று தெரிவித்தார்.

முதலில் சீன-ஐரோப்பிய புவியியல் அடையாள உடன்படிக்கையில் இரு தரப்பும் அதிகாரப்பூர்வமாக கையொப்பமிட்டன. இரண்டு, சீன-ஐரோப்பிய முதலீட்டு உடன்படிக்கை பற்றிய கலந்தாய்வில் முக்கிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளதை இரு தரப்பும் உறுதிப்படுத்தின. மூன்று, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை உயர் நிலை பேச்சுவார்த்தை அமைப்பு முறையையும், எண்ணியல் துறையின் உயர் நிலை பேச்சுவார்த்தை அமைப்பு முறையையும் உருவாக்குவதென இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. நான்கு, பலதரப்புவாதத்தை ஆதரித்து, செயல்படுத்தி, கரோனா வைரஸ் தடுப்புக்கான பன்னாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உலகப் பொருளாதார மீட்சியை தூண்டுவதென இரு தரப்பும் ஒப்புக்கொண்டன என்றும் வாங் வென்பின் தெரிவித்தார்.

வரும் காலத்தில் இப்பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட ஒத்த கருத்துக்களையும் சாதனைகளையும் சீனா சீராக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்