அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள், சீனாவில் முதலீட்டைத் தொடர்ந்து விரிவாக்குவதற்குச் சீனா வரவேற்பு

சிவகாமி 2020-09-17 10:12:45
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் துணை வணிக அமைச்சரும் சர்வதேச வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கான துணை பிரதிநிதியுமான வாங் ஷோ வென், செப்டம்பர் 15 ஆம் நாள் அமெரிக்க - சீன வர்த்தக மன்றத்தின் இயக்குனர் குழுவின் சில உறுப்பினர்களுடன் காணொலி வழியில் கலந்துரையாடினார். அமெரிக்க-சீன வர்த்தக மன்றத்தின் தலைவர் ஆலன், அமெரிக்கத் தொழில் நிறுவனத் தலைமையகங்களின் 15 பொறுப்பாளர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது, சீர்திருத்தத்தை ஆழமாக்கி, திறப்பை விரிவாக்கும் சீனாவின் மனவுறுதி மாறாது எனக் குறிப்பிட்ட வாங் ஷோ வென், அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள், சீனாவில் முதலீட்டைத் தொடர்ந்து விரிவாக்கி சீன வளர்ச்சியின் நலனைக் கூட்டாக அனுபவிக்க சீனா வரவேற்கின்றது என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்