கரோனாவை சமாளிக்க இந்தியா உலக வங்கியிடம் இருந்து 250 கோடி அமெரிக்க டாலர் கடன்!

சிவகாமி 2020-09-17 11:02:32
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியா உலக வங்கியிடம் இருந்து 250 கோடி அமெரிக்க டாலர் கடன் பெற்றுள்ளது.

கோவிட் 19 தொற்றுநோயை சமாளிப்பதற்காக உலக வங்கி இதுவரை 250 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடன்களை மூன்று தவணைகளாக இந்திய அரசுக்கு வழங்கியுள்ளது, ”என்று இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் கேள்வி நேரத்தின் போது இணை நிதியமைச்சர் அனுராக் சிங் தாகூர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில் சுகாதாரத்திற்காக 100 கோடி அமெரிக்க டாலர்கள், சமூக பாதுகாப்புக்காக 75 கோடி அமெரிக்க டாலர்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக 75 கோடி அமெரிக்க டாலர்கள் கடனாக பெறப்பட்டுள்ளது.

கோவிட் -19 நோய் தொற்று காரணமாக நாட்டில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்ட நேரத்தில் ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் இக்கடன் தொகை கையெழுத்தானது என்று தாக்கூர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்