சீனா, தொடர்புடைய நிறுவனங்களின் நீண்டகால வளர்ச்சியைப் பேணிக்காக்கும்

மோகன் 2020-09-27 12:05:44
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ், ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களுடன் கோட்பாட்டு உடன்படிக்கை ஒன்றை உருவாக்கியுள்ளது. ஆனால், இவ்வுடன்படிக்கை சமமற்ற ஒப்பந்தமாகும். வர்த்தக ஒத்துழைப்பு என்பதன் கீழ் அமெரிக்கா மேற்கொண்டுள்ள கொள்ளை நடவடிக்கை இதுவாகும். இதற்கு எதிராக சீன அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இந்த ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கத் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சாக்குப்போக்கு சொல்லி, ஆரக்கிள் நிறுவனம் டிக்டாக்கின் மூலக் குறியீட்டைப் பெற முடியும். அதோடு, பைட் டான்ஸ் நிறுவனத்தின் முக்கிய தொழில் நுட்பங்களையும் அமெரிக்கா பெற்றுக் கொள்ளலாம் என்பதை இது பொருட்படுத்துகிறது. ஆனால், அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் வெளியிட்ட மதிப்பீட்டு முடிவின் படி, டிக்டாக் நிறுவனத்திடமிருந்து சீன அரசு எவ்விதப் பயனர் தரவுகளைப் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலதிக அமெரிக்க இளைஞர்கள் டிக்டாக்கைப் பயன்படுத்தி மகிழ்ச்சியையும், பொருளியல் இலாபங்களையும் பெற்று வருகின்றனர்.

கடந்த 80ம் ஆண்டுகளில் குறைக்கடத்தி துறையில் முன்னணியில் இருந்த ஜப்பானின் தொஷிபா நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன் பிரான்சின் உற்பத்தித் துறையில் பிரதிநிதித்துவம் வாய்ந்த ஆல்ஸ்டாம் நிறுவனம், கடந்த ஆண்டில், சீனாவின் ஹுவாவெய் நிறுவனம் ஆகியவைகளின் மீது தடை நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம், அமெரிக்கா பொருளாதார மற்றும் தொழில்நுட்ப துறையில் முழுமையான மேலாதிக்கத்தைப் பேணிக்காத்து வருகின்றது.

தற்போதைய உலகில், வளர்ச்சியை ஏகபோகமாகக் கைக்கொள்ள எந்த ஒரு நாட்டுக்கும் உரிமை இல்லை. அதோடு, சீனத் தேசியப் பாதுகாப்பு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் நீண்டகால வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் சீனா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்