உலக உயிரின பாதுகாப்புக்காக சீனாவின் பங்கு

கலைமணி 2020-10-01 18:31:33
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 30ஆம் நாள் ஐ.நா பல்வகை உயிரினத் தன்மை உச்சி மாநாட்டில் காணொலியின் மூலம் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், நாம் ஒத்துழைப்புடன், உடனடியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அவர், உலக பல்வகை உயிரின நிர்வாகம் குறித்து 4 ஆலோசனைகளையும் 3 அனுபவங்களையும் அளித்தார். பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது பற்றிய சீனாவின் இலக்கை மீண்டும் வலியுறுத்தினார். பலதரப்புவாதத்தைப் பயன்படுத்தி, உலக சுற்றுச்சூழல் நிர்வாகத்தை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இவையெல்லாம், உலகின் பெரிய நாடாக பொறுப்பு ஏற்று, உலக உயிரின பாதுகாப்புக்கு சீனா பங்காற்றுவதை வெளிகாட்டுகின்றன. சர்வதேச சமூகம் இது குறித்து பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்