பலதரப்புவாதத்தை பேணிக்காக்கும் சீனா

கலைமணி 2020-10-07 15:30:18
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகளாவிய பெரிய பிரச்சினைகள் அதிகமாக உள்ளன. நாளுக்குநாள் மோசமாகி வரும் சர்வதேச அறைகூவல்களை பேச்சுவார்த்தையின் மூலம் மட்டும் தீர்க்க முடியும். சர்தேச பிரச்சினைகளைச் சமாளிக்க மக்கள் கலந்தாய்வு மேற்கொள்ள வேண்டும். ஒத்துழைப்பு மேற்கொள்வதும் ஒற்றுமை ஏற்படுத்துவதும் சர்வதேச சமூகத்தின் பொதுக் கருத்தாக மாறியுள்ளன. அண்மையில் நடைபெற்ற ஐ.நா நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவுக் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் அளித்த இந்த உரை சர்வதேச சமூகத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போதைய பிரச்னைகளைச் சமாளிப்பதற்குப் பலதரப்புவாதத்தின் அவசியத்தை இவ்வுரை வெளிக்காட்டியுள்ளது.

உலகளவில் பரவி வரும் புதிய ரக கரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளது. இந்த அறைகூவலைச் சமாளித்து உலகப் பொருளாதார மீட்சிக்கு துணை புரியும் வகையில் சீனா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. உலக வர்த்தக அமைப்பை மையமாகக் கொண்ட பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையை பேணிக்காப்பது, பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைத்து வினியோக சங்கிலியில் நிதானத்தை ஏற்படுத்துதல், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவின் மூலம் பல நாடுகளுக்கு நோய் தடுப்புப் பொருட்களை வினியோகித்தல் ஆகியவற்றின்மூலம் சீனா தனது பொருளாதார மீட்சியில் ஈடுபடும் அதேவேளையில், உலகப் பொருளாதார மீட்சிக்கும் பங்காற்றி வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்