வறுமை நிவாரண தினத்தை முன்னிட்டு ஷிச்சின்பிங் உத்தரவு

வான்மதி 2020-10-17 17:09:01
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் 7ஆவது தேசிய வறுமை நிவாரண தினத்தை ஒட்டி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் வறுமை ஒழிப்புப் பணி குறித்து முக்கிய உத்தரவிட்டார். 2020ஆம் ஆண்டு, குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தை உருவாக்கி, வறுமை ஒழிப்புப் பணியை நிறைவேற்றுவதற்கு இறுதி ஆண்டாகும். புதிய ரக கரோனா வைரஸ் பரவல், கடுமையான வெள்ளப்பெருக்கு ஆகிய அறைகூவல்களை எதிர்கொண்டு, முழுக் கட்சியும் முழு சமூகத்துடனும் இணைந்து நடைமுறையில் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே, வறிய பகுதிகளில் ஊழியர்களும் பொது மக்களும் இப்போராட்டத்தில் நிலைத்து நின்று இன்னல்களை வென்றெடுத்து, முக்கியமான சாதனைகளைப் பெற்றுள்ளனர். வறுமை ஒழிப்புப் போராட்டத்தின் கடைசிக் கட்டத்தில், பல்வேறு நிலையிலான கட்சி கமிட்டிகளும் அரசுகளும் இப்பணியின் வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தி, வெற்றி பெறும் வரை முயற்சி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பல்வேறு இடங்களின் பல்வேறு வாரியங்கள் வறுமை ஒழிப்புப் பணியின் அனுபவங்களைத் தொகுத்து, அமைப்பு முறை சார் பங்கினை வெளிக்கொணர்ந்து, கிராமப்புற வளர்ச்சியுடன் இணையும் வகையில் இப்பணியின் சாதனையை தொடர்ந்து வலுப்படுத்தி விரிவாக்க வேண்டும். வறிய பகுதிகளிலுள்ள வறிய மக்களின் உள்ளார்ந்த ஆற்றலை எழுப்பி, குறைவான வருமானமுடையவர்களை உழைப்பு மூலம் செல்வமடைய ஊக்குவித்து, அனைவரும் கூட்டாக செழுமை அடையும் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், வறுமை ஒழிப்புக்கான பரிசு பெற்றவர்களைப் பாராட்டும் மாநாடு மற்றும் அருஞ்செயல் அறிமுகக் கூட்டம் 17ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் ஷிச்சின்பிங்கின் உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்