உலக வறுமை குறைப்புக்கு உதவும் சீனாவின் அனுபவங்கள்

மோகன் 2020-10-17 18:06:13
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அக்டோபர் 17ஆம் நாள் சீனத் தேசிய வறுமை நிவாரண தினம் மற்றும் சர்வதேச வறுமை ஒழிப்பு தினமாகும். உலக வங்கி வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி, சீனச் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு செயல்படுத்தப்பட்ட 40 ஆண்டுகளில், 80 கோடி சீனர்கள் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர். இந்தக் காலத்தில் உலக அளவில் வறுமையிலிருந்து விடுபட்டோரில் 70 விழுக்காட்டுக்கு மேலானார் சீனாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவ்வாண்டு இறுதியில், சீனா வறுமை ஒழிப்பு பணியை நிறைவேற்றிய பின், ஐ.நாவின் 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி திட்டத்தின் வறுமை குறைப்பு நோக்கத்தை 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அடையும்.

2015ஆம் ஆண்டு வறுமை குறைப்பு மற்றும் வளர்ச்சி பற்றிய உயர் நிலை கருத்தரங்கில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கூறுகையில், வளர்ச்சி மூலம் வறுமை ஒழிப்பதில் நிலைத்து நின்று, வறுமையை தீர்ப்பதற்கான அடிப்படை வழியாக வளர்ச்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

சொந்த நாட்டு வறுமை ஒழிப்பு பணியில் உறுதியுடன் ஈடுபடும் நிலையில், சீனா தெற்கு தெற்கு ஒத்துழைப்பு மேற்கொண்டு, இந்த துறையில் வளரும் நாடுகளுக்கும் வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கும் ஆதரவையும் உதவியையும் வழங்கி வருகின்றது.

சீனாவின் முன்மொழிவுக்கிணங்க, பிரிக்ஸ் நாடுகள் புதிய வளர்ச்சி வங்கி, ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன், பல்வேறு நாடுகளுடன் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைத் திட்டத்தைச் சீனா கூட்டாக உருவாக்கியுள்ளது. வளரும் நாடுகளின் வறுமை குறைப்புக்கு சிறந்த சூழலை உருவாக்கி, அந்த நாடுகளுக்கு உலக தொழில்துறை சங்கிலியை விநியோக சங்கிலியுடன் ஒருங்கிணைக்கவும், சொந்த வளர்ச்சி திறன்களை பலப்படுத்தவும் உதவி வழங்கி வருகிறது.

தொற்று நோய் பரவல் காலத்தில், உலக வறுமை குறைப்பு பணிகளுக்கு சீனாவின் வறுமை ஒழிப்பு அனுபவம் மாபெரும் பங்காற்றி வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்