நாகா பிரதேசத்தில் ஆர்மேனியா மற்றும் அஜர்பைஜான் போர் நிறுத்தம்

பூங்கோதை 2020-10-18 16:46:04
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நாகா பிரதேசத்தில் மனித நேய போர் நிறுத்த உடன்படிக்கையை உருவாக்கியுள்ளதாக ஆர்மேனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்கள் அக்டோபர் 17ஆம் நாள் தெரிவித்தன.

ஆர்மேனியா மற்றும் அஜர்பைஜான் செப்டம்பர் 27ஆம் நாள் முதல் நாகா பிரதேசத்தில் புதிய சுற்று மோதலை நடத்தின. முன்பு எட்டப்பட்டிருந்த போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி, மற்ற தரப்பு தான் முதலில் தாக்குதல் நடத்தியது என்று இரு நாடுகளும் ஒன்றை ஒன்று குற்றஞ்சாட்டின. கடந்த சில நாட்களாக, அப்பாவி மக்கள் உள்ளிட்ட அதிகமானோர் இம்மோதலில் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்