உணவுப் பொருட்களின் பொட்டலத்தின் மேல் கரோனா கண்டுபிடிப்பு

வான்மதி 2020-10-18 16:50:10
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் ட்சிங்தாவ் நகரில் ஏற்பட்ட கரோனா பரவல் பற்றிய ஆய்வில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறை நிலையில் வைக்கப்பட்டிருந்த மீன் உணவுப் பொருட்களின் வெளிப்புற பொட்டலத்தின் மேல் செயலாக்க கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. உலகளவில் குளிர்பதன சங்கிலியில் ஏற்றிச்செல்லப்பட்ட உணவுப் பொருட்களின் பொட்டலத்தின் மேல் செயலாக்க கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதன்முறை. மேலும், செயலாக்க வைரஸ் உள்ள பொட்டலத்தைத் தொட்டால், நோய் தொற்று ஏற்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சீன நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் 17ஆம் நாள் தனது இணையதளத்தில் தகவல் வெளியிட்டது.

குறிப்பிட்ட சூழ்நிலையில் பொருட்களின் மேற்பரப்பில் வாழும் வைரஸ் அதனுடன் தொடர்பு கொண்டு ஆனால் உரிய பாதுகாப்புடன் இல்லாதவருக்கு தொற்று ஏற்படக் கூடும். குளிர்பதன சங்கிலியில் வரும் பொருட்களின் புழக்கத்தில் ஈடுபடும் பணியாளர்கள் இத்தகைய தொற்று இடர்பாடுகளை முக்கியமாக எதிர்கொள்கின்றனர் என்றும் இம்மையம் தெரிவித்தது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்