“கரோனா தடுப்பில் அமெரிக்காவின் புது வியூகம் பைத்தியகாரத்தனமானது”

பண்டரிநாதன் 2020-10-18 18:30:34
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொவைட்-19 தொற்றுநோய் கட்டுப்பாட்டில் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள ‘குழு எதிர்ப்பாற்றல்’ என்ற புதிய வியூகம் மிகவும் பைத்தியகாரத்தனமானது என்று ஜெப்ரி ஷேஸ் என்ற கட்டுரையாளர் விமர்சித்துள்ளார். சிஎன்என் ஊடகத்தில் வெளியாகியுள்ள இக்கட்டுரையில், இப்புதிய வியூகத்தைப் பல அறிவியலாளர்கள் விமர்சித்துள்ளனர். அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் தலைவர் மருத்துவர் அந்தோனி ஃபாசி உள்பட பல மருத்துவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனைக் கடைப்பிடித்தால் குறுகிய காலத்துக்குள் அதிக பாதிப்பு ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு மாறாக, ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகள் கடைபிடித்த பெருமளவிலான சோதனை, தொடர்பு நபர்களைக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல், முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட அடிப்படை மருத்துவ நடவடிக்கைகளை கடைப்பிடித்தாலே வைரஸ் பரவலை அமெரிக்கா கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் இத்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,18,000 ஆக உள்ளது. அடுத்த பிப்ரவரிக்குள் மேலும் 1,71,000 பேர் இத்தொற்றால் உயிரிழக்க வாய்ப்புண்டு என்று வாஷிங்டன் மருத்துவப் பள்ளி ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சீனா தயாரித்து வரும் கொவைட்-19 தடுப்பு மருந்து மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். சீனாவின் நேர்மைத் தன்மை அதன் சாதனைகள் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் டுட்டர்டே தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்