இணைம் வழியாக தேயிலை விற்பனையை ஊக்குவிக்க இலங்கையின் திட்டம்

2017-08-22 14:40:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn
இணையம் வழியாக நாட்டின் பிரபலமான சிலோன் தேயிலையின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், இலங்கை அரசு சீனாவின் அலிபாபா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையை நடத்துகின்றது என்று இலங்கையின் உள்ளூர் செய்தி ஊடகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இணைய மேடை மூலம் சிலோன் தேயிலையை விற்பது பற்றி அலிபாபாவுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளதாக இலங்கையின் ஏற்றுமதி வளர்ச்சி வாரியத்தின் பொது இயக்குநர் ஜீவனி சிறிவார்தினி கொழும்பு சர்வதேச தேயிலை மாநாட்டில் தெரிவித்தார். இலங்கையின் சிலோன் தேயிலை, பிரபலமான உலகத் தர அடையாளமாக குறிப்பாக சீனச் சந்தையில் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்