பிரிக்ஸ் நாடுகளுக்குள் முதலீட்டு வாய்ப்புகள் அதிகம்

2017-08-27 15:33:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய பொருளாதாரச் சமூகங்களின் பிரதிநிதியாகத் திகழ்கின்ற பிரிக்ஸ் நாடுகள், சர்வதேச முதலீட்டு அரங்கில் முக்கிய பங்கு ஆற்றி வருகிறன. பிரேசில், இந்தியா, ரஷியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் ஒன்றுக்கு ஒன்று முதலீடு செய்ய உள்ளார்ந்த சாத்தியம் அதிகம் என்று சீன வணிக துறைத் துணை அமைச்சர் வாங் ஷுவு வென் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு, பிரிக்ஸ் நாடுகளின் மொத்த வெளிநாட்டு முதலீட்டுத் தொகையில், ஐந்து உறுப்பு நாடுகளுக்குள் உள்ள முதலீட்டுத் தொகையின் பங்கு 6 விழுக்காடு மட்டும் ஆகும். அதிக முதலீடு பிற நாடுகளுக்கு சென்றுள்ளதை அது பொருட்படுத்துகிறது என்று வாங் ஷுவு வென் சுட்டிக்காட்டினார்.

2016ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் வெளிநாட்டு முதலீட்டுத் தொகை, 20ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியதோடு, உலக முதலீட்டுத் தொகையில் 12 விழுக்காடு இடம்பிடித்தது என்று ஐ.நா. வர்த்தக வளர்ச்சி மாநாடு வெளியிட்ட புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்