பிரிக்ஸ் நாடுகளின் நிதி மற்றும் நாணயத் துறை ஒத்துழைப்பு

2017-08-31 16:39:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாடுகளின் நிதி மற்றும் நாணயத் துறை ஒத்துழைப்பு

நிதி மற்றும் நாணய துறைச் சார்ந்த ஒத்துழைப்பு என்பது, பிரிக்ஸ் முறைமையில் மிகவும் முக்கிய ஒரு பகுதியாகும். சீனாவின் சியாமென் நகரில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், நிதி மற்றும் நாணயத் துறையில் அதிக ஒத்துழைப்பு சாதனைகள் படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

31ஆம் நாள் வியாழக்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன அரசவையின் செய்தி அலுவலகத்தின் செய்தியாளர் கூட்டத்தில், சீன நிதி அமைச்சகத்தின் சர்வதேச நிதி மையத் தலைவர் சோவ் ச்சியாங்வூ பேசுகையில்,

கடந்த 10 ஆண்டுகளில், பிரிக்ஸ் நாடுகள், திறந்த நிலை, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி போன்ற கோட்பாடுகளைப் பின்பற்றியதோடு,  ஒத்துழைப்பு துறைகளை இடைவிடாமல் விரிவாக்கியுள்ளன.  பெரிய வளரும் நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கும், உலகப் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கும் முக்கிய மேடையாக பிரிகஸ் முறை திகழ்கிறது. பிரிக்ஸ் செல்வாக்கு மற்றும் ஈர்ப்பு ஆற்றல் தெளிவாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.

இருப்பினும், தற்போது, உலகப் பொருளாதாரம் மந்தமாக மறுமலர்ச்சி அடைந்து வருகிறது. மீட்சியில் உறுதியற்ற மற்றும் நிலையற்ற காரணிகள் இன்னும் அதிகமாக காணப்படுகின்றன. உலக மயமாக்கத்துக்கு எதிர் குரல் எழுந்து, பாதுகாப்புவாதம் தொடர்ந்து பரவி வருகிறது. பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்புகளில், பல்வகை தெரிந்த மற்றும் மறைவான தடைகள் நீக்கப்பட வேண்டியவை என்று கருதப்படுகிறது.

இந்த அறைகூவல்களைச் சமாளிக்கும் வகையில், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் வெளிநாட்டு பொருளாதார ஆய்வகத்தின் தலைவர் யே ஃபுஜிங்  தனது ஆலோசனைகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது

2020ஆம் ஆண்டுக்குள் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புகளை நடைமுறைப்படுத்தும் திட்டங்களை பிரிக்ஸ் நாடுகள் வெகுவிரைவில் வகுக்க வேண்டும். உலக வர்த்தக அமைப்புக்குள் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில்,  ஒன்றுக்கொன்று விதிக்கப்படும் சுங்க வரி உள்ளிட்ட தடைகள் குறைக்கப்பட வேண்டும். அதன் மூலம், உண்மையான ஒத்துழைப்பு சாதனைகள் விரைவாக பெறப்படலாம். இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகளின் தடையற்ற வர்த்தக மண்டலத்தை அமைக்கும் சாத்தியத்தை ஆய்வு செய்யும் என்று தெரிவித்தார்.

நடப்பு பிரிக்ஸ் மாநாட்டில் பெறப்படும் சாதனைகள் பற்றி சீன நிதி அமைச்சகத்தின் சர்வதேச நிதி மையத் தலைவர் சோவ் ச்சியாங்வூ பேசுகையில், நிதி மற்றும் நாணய துறையில் ஒத்துழைப்பு சாதனைகள் மிக அதிகமாக இருக்கும். ஒட்டுமொத்த கொள்கைகளை ஒருங்கிணைப்பது, ஜி-20 அமைப்புக்குள்ள நிதி ஒத்துழைப்பை ஆழமாக்குவது,  பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி, வரி மற்றும் நாணயம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளின்  சாதனைகள் பெறுவதை எதிர்பார்ப்பதாக கூறினார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்