தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக சீன-மாலத்தீவு பேச்சுவார்த்தை முடிவு

மதியழகன் 2017-09-17 16:31:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக சீன-மாலத்தீவு பேச்சுவார்த்தை முடிவு

தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவது தொடர்பாக, சீனாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான இரு தரப்புப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளதாக, சீன வணிக அமைச்சகம் 16ஆம் நாள் அறிவித்தது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாட்டு வர்த்தகங்களில் 95 விழுக்காட்டுக்கும் மேலான சரக்குப் பொருட்களுக்கு சுங்க வரி இல்லை என்ற சலுகை அனுமதிக்கப்படும்.

பாகிஸ்தானை அடுத்து, தெற்காசியாவில் சீனாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கிய 2ஆவது நாடு, மாலத் தீவு ஆகும். 2015ஆம் ஆண்டின் இறுதியில் முதல் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இதற்கிடையில் மொத்த 5 சுற்று பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒரு முறை அமைச்சர் நிலை கலந்தாய்வு நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்