4ஆவது காலாண்டில் கூட்டு நிதித் திரட்டல்

வான்மதி 2017-10-02 16:25:58
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியும் ஆசிய வளர்ச்சி வங்கியும் அண்மையில் 4ஆவது கூட்டு நிதித் திரட்டல் நடவடிக்கையை மேற்கொண்டது. இம்முறையில் இந்தியாவுக்கு நன்மை கிடைக்கும்.

பிரதேசங்களுக்கிடையே மின் தொகுதி அமைப்பு முறையை சீராக்கி, தூய்மை எரியாற்றலின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் இந்தியாவுக்கு 10 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடன் தொகையை வழங்க ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று அக்டோபர் 2ஆம் நாள் கிடைத்த தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வங்கியின் துணைத் தலைவர் பான் டிஆன் கூறுகையில், இதர சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து, எங்கள் முதலீடு மற்றும் அறிவுகளைப் பயன்படுத்தி, ஆசிய மக்களுக்கு நன்மைகளை உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்