சீனா:பலதரப்பு வர்த்தக அமைப்பு முறை பேணிக்காப்பு

நிலானி 2017-10-22 14:59:12
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனா:பலதரப்பு வர்த்தக அமைப்பு முறை பேணிக்காப்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 24ஆவது நிதித் துறை அமைச்சர்கள் கூட்டம் 21ஆம் நாள் வியட்நாம் நாட்டின் ஹோய்யன் நகரில் நிறைவடைந்தது. தாராள வர்த்தக அடிப்படையிலான பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையை உறுதியாகப் பேணிக்காக்க வேண்டுமென சீனப் பிரதிநிதி ஒருவர் இக்கூட்டத்தில் வலியுறுத்தினார்.

தற்போது, உலகப் பொருளாதாரம் சீரான நிலையில் வளரத் துவங்கியுள்ளது. ஆனால், பொருளாதாரத்தின் உள்ளாற்றலில் வலிமை இல்லை. வளர்ந்த நாடுகளின் பொருளாதார கொள்கையின் உறுதியற்ற தன்மை அதிகரித்துள்ளது. வர்த்தக பாதுகாப்புவாதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆசிய-பசிபிக் பிரதேசத்திலுள்ள பல்வேறு தரப்புகள் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும். பலதரப்புவாதத்தில் ஊன்றி நிற்க வேண்டும் என்று சீன நிதித் துறை அமைச்சரின் உதவியாளர் சாவ்மின்ஜி தெரிவித்தார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்